உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன். இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன. அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது. வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும் கூட மிக முக்கியமான ஆவணங்களாகவும், பதிவுகளாகவும் மாறி விடுவதுண்டு.
சொல்வதெல்லாம் உண்மை
September 21, 2011
The Cage-ஐ முன்வைத்து ஈழப் போர் - எனது வாசிப்புகளூடான ஒரு பார்வை
ஈழத்தில் நடந்தேறிய போரின் இறுதிக் கட்டத்தில் பாரிய அளவில் போர்க் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் பரவலாக வெளிவந்துகொண்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று கோடன் வைஸ் (Gordon Weiss) எழுதி வெளிவந்திருக்கின்ற The Cage: The Fight For Srilanka and The Last Days of Tamil Tigers என்கிற நூலாகும். அவுஸ்திரேலியாவில் பிறந்த கோடன் வைஸ் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றுவதுடன், கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றுவதுடன் 2007 முதல் 2009ன் இறுதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இலங்கையில் பணியாற்றியவர். இறுதிப் போர் கருக்கொண்டு பாரிய அழிவுகளுடன் நடந்தேறிய இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றியவர்
Labels:
The Cage,
அரசியல்,
ஈழம்,
தமிழ்த் தேசியம்,
போருக்குப் பின்னர்
July 7, 2011
எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்
எஸ்பொ நனவிடை தோய்தல்
இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்போ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை.
Labels:
அனுபவம்,
இயல் விருது,
இலக்கியம்,
எஸ். பொ,
சிவத்தம்பி,
நிகழ்வுகள்
June 19, 2011
நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் - எஸ். பொ
ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுல் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. ஈழத்துப் படைப்பாளிகளில் எஸ்பொவையும், மு. தளையசிங்கத்தையும் முழுவதும் தொடர்ச்சியாகவும், விரிவாகவும் வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நிறையத் தடவைகள் காலந்தாழ்த்தியே வந்துள்ளேன். அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக வாசிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.
Labels:
இலக்கியம்,
ஈழத்து எழுத்தாளர்கள்,
எஸ். பொ,
சமூகம்
June 13, 2011
ஜெயமோகனின் இணையத்தளத்தில் என் பெயர் இடம்பெற்ற ஜென்ம சாபல்யத்துடன்.......
-1-
நேற்று ரொரன்ரோவில் நடைபெற்ற குறும்பட விழா பற்றி ஜெயமோகன் அவர்கள் சில கருத்துக்களை எழுதி இருந்தார். அதில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகன் சொல்கிறார், "‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று சொல்கிறீர்களே ஏன்?’ கன்யாகுமரி மொழியில் மனசுக்குள் ‘வெளங்கிரும்’ என்று சொல்லிக்கொண்டேன்." என்று. முதலில் நான் அவரிடம் கேட்ட கேள்விகள் என்னவென்பதையும், அதை ஏன் கேட்க நேர்ந்தது என்பதையும் சொல்கிறேன்.
Labels:
இலக்கியம்,
எதிர்வினை,
சமூகம்,
சாரு நிவேதிதா,
ஜெயமோகன்,
புலம்பெயர்வாழ்வு
Subscribe to:
Posts (Atom)


